Saturday, July 25, 2020

கந்த சஷ்டி கவசம் பற்றி கறுப்பர் கூட்டம் YouTube சேனலில் தவறாக கூறியது என்ன?

கந்த சஷ்டி கவசம் பற்றி கறுப்பர் கூட்டம் YouTube சேனலில் தவறாக கூறியது என்ன?

கருப்பர் கூட்டத்தின் காணொளியை பார்த்தேன். கந்த சஷ்டி கவசத்தில் ஆண் பெண் குறி ,மார்பு ,மார்பு காம்பு ,ஆசனவாய் போன்ற உறுப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளது .இந்த உறுப்புக்களை எல்லாம் இறைவனிடம் குறிப்பிட்டு வேண்டுவது அசிங்கம் இல்லையா என்பதுதான் கருப்பர் கூட்டத்தின் வாதம்.



எனக்கு தெரிந்து இந்த உறுப்புகளை குறிப்பிடுவதில் எந்த அசிங்கமும் இருப்பதாக தெரியவில்லை. எல்லா உறுப்புகளைப் போல இவையும் உடல் இயக்கத்திற்கு முக்கிய பங்கு வகிக்கும் ஒரு உறுப்புகளே இதைக் குறிப்பிடுவதில் என்ன அசிங்கம் இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை.

இந்த உறுப்புகளில் நோய் வந்தால் நாம் மருத்துவரிடம் சென்று நோயை தீர்க்க முயலாமல் மறைக்க வா போகிறோம். ஒரு பக்தன் இறைவன் மீது நம்பிக்கை வைத்து தன் எல்லா உறுப்புகளையும் பாதுகாக்க வேண்டுவதில் என்ன தவறு இருக்கிறது.

அந்த காணொளியில் பேசிய நபரின் வார்த்தைகளில் தான் மிகுந்த ஆபாசம் இருந்தது எனக்குத்தெரிந்து கந்தசஷ்டி கவசத்தில் எந்த ஆபாசமும் இல்லை.

அவர்கள் தொடர்ந்து பகுத்தறிவு என்று பேசிக்கொண்டு அறியாமை யோடு அபத்தமான கருத்துக்களை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

சித்தர்கள் பகுத்தறிவாதிகள் நமக்கு மருத்துவத்தை ,கலையை, இலக்கியத்தை கொடுத்தார்கள் எந்த சித்தரும் கடவுள் மறுப்பை சொல்லவில்லை. சில சித்தர்கள் வேண்டுமானால் சிலை வழிபாட்டை விமர்சித்திருக்கிறார்கள் ஆனால் கடவுள் இல்லை என்று எந்த சித்தரும் சொன்னதில்லை . இந்த திராவிட கயவர்கள் இது வரை பகுத்தறிந்து ஒன்றையும் கிழிக்கவில்லை ஆனால் தங்களை தாங்களே பகுத்தறிவுவாதிகள் என்று வெட்கமே இல்லாமல் சொல்லிக்கொண்டு திரிகிறார்கள்.
தமிழகத்தில் நாத்திகம் என்பது தோல்வியை தழுவிய சித்தாந்தம்.

எவ்வளவுதான் தமிழகம் பெரியார் மண் அப்டி இப்டினு சொன்னாலும், கடவுள் விஷயத்தில் பெரியாருக்கே புளிப்பு காட்டிட்டு போய்ட்டாங்க நம்மாளுங்க.

மலையை பார்த்து குரைக்கும்.. என்பது போல்.. இதை பெரிது படுத்த தேவை இல்லை.
இது போன்றவர்களை பிரபலபடுத்தாமல் இருப்பதே நல்லது.

கறுப்பர் கூட்டம் வெளியிட்ட வீடியோவை பார்க்கலாம் என தேடும்போது அதுகுறித்த பாலிமர் நியூஸ் கண்ணில்பட்டது.

நியூஸ் முடிவில் அவரை கைது செய்து வேனில் ஏற்றிக்கொண்டு செல்கிறார்கள்.
கடைசி வரிகள்..
வாகனத்தின் பின் திருப்போரூர் முருகன் திருஉருவமும் கோயிலும்

#கந்த_சஷ்டி_கவசம் #கறுப்பர்_கூட்டம் 




Labels:

1 Comments:

At March 5, 2022 at 8:18 AM , Blogger gardynahaddaway said...

Las Vegas hotel room & casino - jtmhub.com
› hotels-room-and-casino- 창원 출장마사지 › hotels-room-and-casino- Wynn Las Vegas · 서산 출장안마 Wynn Tower Suite Salon. Luxury 제주 출장샵 Las Vegas hotel with 1 king bed and 포항 출장안마 2 queen-size beds · Wynn Tower Suite Salon · 광주 출장마사지 Wynn Tower Suite King.

 

Post a Comment

please do not enter any spam link in the comment box

Subscribe to Post Comments [Atom]

<< Home